Mnadu News

இயற்கை முறையில் அழகு சேர்க்க:

உடற்பயிற்சி  செய்தாலோ  ,காஸ்மெடிக்ஸ்  பயன்படுத்தியோ   அழகுப்படுத்தும்  பெண்களுக்கு    ஏகப்பட்ட பின்விளைவை  ஏற்படுத்தும்  .இயற்கை மருத்துவ குறிப்புகளை   யாரையும் எதிர்பார்க்காமல், நாம் பயன்படுத்துவதோடு  மட்டுமல்லாமல்  எந்த ஒரு பின்விளைவையும்  ஏற்படுத்தாது . அதற்கான வலி முறைகளை பார்க்கலாம் .

முடி நன்றாக வளர ;

முடி  செழித்து  வளர  வாரம்  ஒரு முறை   வெண்ணெயை தலைக்கு தடவி  ஒரு மணி நேரம் கழித்து அலசி  வந்தால்  முடி  நன்றாக வளரும்.

கருவளையம் நீங்க ;

கண்களை  சுற்றியுள்ள  கருவளையம்   நீங்க   வெள்ளரிக்காய்  ஜுசை பஞ்சில்  நனைத்து   கண்கள் மீது தினமும்  போட்டு வரவும் .

உதடு  வசீகர  தோற்றம் பெற ;

உதடு   வசீகரமாக  இருக்க  முட்டையில்  வெண்கரு, பதம் பவுடர், பால் இம்மூன்றையும்  கலந்து   உதட்டில் தடவி  அது காய்ந்ததும்   சூடு நீரில்  கழுவி விட வேண்டும் .

முகம் பொலிவு  பெற ;

உருளைக்கிழங்கை  இடித்து  சாறு பிழிந்து ,சமமாக  தென் கலந்து  முகத்தில்  தடவினால்  முகம் அழகுபெறும் .

 

முகச்சுருக்கம்  நீங்க ;

முகத்தில் உள்ள சுருக்கம்  மறைய  முட்டையின்  வெண்கருவை  தடவுங்கள் ,சிறிது நேரம்  கழித்து  முகம் கழுவ  முகத்திலுள்ள  சுருக்கம் மறையும் .

கருமை நீங்க ;

கருமையடைந்த    முகம் பொலிவு  பெற    பாதாம் பருப்பை   பாலில் அரைத்து  இரவில் முகத்தில் தொடர்ந்து  பூசிவர பொலிவு பெறும்.

முக வறட்சி  நீங்க ;

முகத்தில்  வறட்சி அகல   பச்சை கொத்தமல்லி   அல்லது  புதினாவை  நன்றாக  அரைத்து   முகத்தில்  பூசி  பிறகு சிறிது  நேரம்  கழித்து அலம்ப  வேண்டும் .

முகப்பரு  நீங்க ;

முகப்பருக்கள்  போக  பூண்டு அல்லது கருந்துளசியை   அரைத்து  போட நாளடைவில் பருக்கள்  மறையும் .

வாய் நாற்றம் நீங்க ;

வாய் துர்நாற்றம்   நாம் பேசும் பொது  உண்டாகும்  ,எப்போதும்   புத்துணர்வோடு  இருக்க  வேண்டுமென்றால்  , புதினை கீரையை  காயவைத்து  போடி செய்து   பல் துலக்கி வந்தால் புத்துணர்வோடு இருப்பதோடு மட்டுமல்லாமல்  பல் வெண்மையாக இருக்கும் .

பல் வெண்மையாக இருக்க;

பல்  வெண்மையாக இருக்க   இரவு  நேரத்தில்  தினமும் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன்  பல் வெண்மை பெறும்.

உதடு  ஷைனிங்  பெற ;

உதடு  வறண்டு  காணப்படுகிறதோ ,அதை போக்கி   ஷைனிங் பெற தினமும்  உதட்டின் மேல்  தேங்காய் எண்ணெய்  தடவி வந்தால்  ஷைனிங்  தோற்றறை பெறும் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share this post with your friends