Mnadu News

இயற்கை விவசாய அரிசி, குருணை ஏற்றுமதிக்கு தடை நீக்கம்.

நாட்டின் நுகர்வு சந்தையில் விலையேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டில் விநியோகத்தை அதிகரிக்க பாசுமதி ரகம் அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெளிநாட்டு வர்த்தகத்துக்கான தலைமை இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘செப்டம்பர் மாதம் விதிக்கப்பட்ட தடைக்கு முன்பு அமலில் இருந்த விதிகளின்படியே, குருணை உள்ளிட்ட பாசுமதி ரகம் அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதி மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில், 550 கோடி டாலர் (சுமார் ரூ. 4,487 கோடி) மதிப்பில் அரிசி ஏற்றுமதி நடைபெற்றது. கடந்த 2021-22 நிதியாண்டில், 970 கோடி டாலர் (சுமார் ரூ.7,915 கோடி) மதிப்பில் அரிசி ஏற்றுமதி வர்த்தகம் இருந்ததாக வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜய் சீதா கூறுகையில், ‘ஆண்டுக்கு 10,000 முதல் 15,000 டன் வரையிலான அளவுகளில் பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதியாகின்றன. கடந்த 4-5 ஆண்டுகளாக அரிசி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. ஏற்றுமதிக்கான தடையை விலக்கி அரசு சரியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends