Mnadu News

இறுதிக்கட்ட படப்பிடிப்பை துவக்கி உள்ள வாரிசு! விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் படம் “வாரிசு”. முதல் முறையாக நடிகை
ராஷ்மிகா மந்தனா இப்படத்தின் மூலம் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார். இவர்களோடு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்கள்.

2023 பொங்கலுக்கு வெளியிட தயாராகி வரும் படக்குழு இதன் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சில நாட்கள் முன் துவங்கி உள்ள நிலையில், இன்னும் இரண்டு பாடல்கள் மற்றும் இரண்டு சண்டைக் காட்சிகள் மட்டுமே உள்ளன என அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டு உள்ளது.

ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே பல கோடிகள் வியாபாரம் செய்துள்ளது வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends