சென்னை பெரியமேட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டு கியூ பிரிவு போலீசார் சோதனை செய்தபோது சுமார் ஏழரை டன் வெடிகுண்டுகள் தயாரிக்கும் மூல பொருட்களை பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து இது சம்மந்தமாக 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தபோது ஜாமினில் வெளியே வந்த இலங்கை தமிழர்கள் நிதி, யோக ராஜா, பாரதிதாசன் ஆகிய மூன்று பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் மூன்று பேரையும் தேடப்படும் குற்றவாளிகளாக நீதிபதி இளவழகன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More