நாட்டின் எதிர்காலம் மிகவும் ஆபத்தானது என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காலி – அபரகட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் அழுத்தங்கள் தற்காலிகமாக குறைந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் இதனை விடவும் நெருக்கடி நிலைமைகள் ஏற்படும்.
கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகினால் பௌத்த மகா சங்கத்தினராலோ அல்லது ஆட்சியாளர்களினாலோ ஒன்றும் செய்ய முடியாத நிலைமை உருவாகும்.
அவ்வாறான ஓர் நிலைமை ஏற்படுவதனை தவிர்ப்பது அனைவரினதும் கடமையாகும். நாட்டின் ஆட்சியாளர், ஆட்சியை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல நேரிட்டதன் மூலம் நாட்டில் எவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதனை புரிந்து கொள்ள முடியும்.
நாட்டில் அந்த நெருக்கடி நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. தற்காலிகமாக அது வெளிப்படாதிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின்சாரக் கட்டணம் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும், விகாரைகளின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.