மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் மூத்த சகோதரர் இல. கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று மாலை சென்னை வந்த அவர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதையடுத்து, இன்று இல. கணேசனின் இல்ல விழாவில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.
இந்நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த விழாவில் பங்கேற்றார். அவருடன் திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு, பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்துகொணடனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More