Mnadu News

இளங்கலை பட்டப் படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர் கல்வித் துறை சுற்றறிக்கை.

உயர் கல்வித் துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பிகாம், பிபிஏ, பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெறவில்லை.இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் இடம்பெற வேண்டும். ஏற்கனவே இந்த பாடப் பிரிவுகளில் முதலாமாண்டில் தமிழ் பாடத் தேர்வு உள்ளது. இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் தமிழ் பாடத் தேர்வு இருக்க வேண்டும்.நடப்பு கல்வியாண்டில் வரக்கூடிய செமஸ்டர் தேர்வுகளில் இருந்து தமிழ் மொழித் தேர்வை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends