காசா முனை மீதுஇஸ்ரேல் திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவின் 3 தளபதிகள் கொல்லப்பட்டனர். குடியிருப்பு மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவின் 3 தளபதிகள், குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் உள்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாமுனையில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமிக் ஜிகாத், ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதனால், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More