பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இதைத்தொடர்ந்து இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,147 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசாமுனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 ஆயிரத்து 978 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் நடந்த மோதலில் 319 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது.