ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
‘
ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் என்பது பாரம்பரியமாக முஸ்லிம் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு வெளியே ஆண்களின் முன்னிலையில் அணியும் ஒரு முக்காடு ஆகும்.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாய ஆடைக் குறியீட்டை ஈரான் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை – சிறந்த விற்பனையான வாஷிங் மெஷின்கள் 5999/- மட்டுமே.
இதனை பொதுவெளியில் பெண்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அந்த வகையில், ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் கூட அவ்வப்போது நடக்கிறது.
கடந்த வாரம் ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒஸ்லோ வைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் கூறிய தகவலின் படி, போராட்டக்காரர்களை அடக்க ஈரானிய பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் இதுவரை சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது.
ஈரான் மனித உரிமைகள் (IHR) இயக்குனர் மஹ்மூத் அமிரி-மொகத்தம், வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானிய மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை அடைவதற்காக வீதிக்கு இறங்கி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். ஆனால், அரசாங்கம் மக்களுக்குதோட்டாக்களால் பதிலடி கொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
போராட்டம் முதலில் வடக்கு குர்திஸ்தான் பகுதியில் தொடங்கியது, அதன் பிறகு தற்போது ஈரான் முழுதும் பரவியுள்ளது. வடகிழக்கு நகரமான டப்ரிஸ்ஸில், நடைபெற்ற போராட்டத்தின் போது முதல் நபர் கொல்லப்பட்டதாக ஈரான் மனித உரிமைகள் தகவல் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .