Mnadu News

“ஈரான் செல்வதற்கு விசா தேவையில்லை” – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைசர் எஸதுல்லாஹ் சர்காமி, ‘ஈரானின் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார். சமீபத்தில், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends