Mnadu News

ஈரான் டிரோன்கள் மூலம் தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு.

உக்ரைன் மீது கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதற்கிடையே ரஷியா- கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் வகையில் ரஷியாவால் கட்டப்பட்ட கெர்ச் தரைப் பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியது.
இந்நிலையில், ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 காமிகேஸ் வகை 400 டிரோன்கள் மூலம் உக்ரைனின் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக அதிபர் ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டி உள்ளார்.

Share this post with your friends