Mnadu News

உச்சத்திற்கு தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்ததால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில், இன்று வரலாறு காணாத அளவு தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டதால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.1,120 உயர்ந்து ரூ.51,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.6,390-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends