“3” படத்தில் துவங்கிய இசை பயணம் இன்று அனிருத் இல்லாத படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு அவரின் வளர்ச்சி இருந்து வருகிறது.

வணக்கம் சென்னை, எதிர் நீச்சல், ரெமோ, ரம், கத்தி, தானா சேர்ந்த கூட்டம், விவேகம், வேதாளம், பேட்ட, மாஸ்டர், தர்பார், பீஸ்ட், விக்ரம் என அனிருத் இசையில் அனைவரும் ஆடியுள்ளனர்.

ராசியான இசை அமைப்பாளர் என பெயர் பெற்றுள்ள அனிருத் இசையில் சமீப காலங்களில் வெளியான படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் என்பதால் அவர் தனது சம்பளத்தை ₹5 கோடிகளுக்கு ஏற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்தியன் 2, தளபதி 67, ஜவான் ஆகிய பெரிய படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இந்த நிலையில் லைக்கா நிறுவனம் தங்கள் அடுத்தடுத்த பெரிய படங்களுக்கு அனிருதை அணுகி உள்ளனர். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருவதால் தமது சம்பளத்தை அவர் அதிரடியாக உயர்த்தி உள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரிடம் தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
