Mnadu News

உச்சத்தை தொட்ட ஆம்னி பஸ் கட்டணம்

தசரா பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்களுக்கு புறப்பட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் சொகுசு பஸ்களின் கட்டணம் உச்சமடைந்துள்ளது.. குறிப்பாக, சென்னையில் இருந்து இன்று நெல்லை செல்லும் தனியார் பஸ்களில் அதிகபட்ச கட்டணம் 3 ஆயிரத்து 400 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அNது போல், சென்னையில் இருந்து உடன்குடி செல்லும் தனியார் ஆம்னி பஸ்களின் அதிகபட்ச கட்டணம் 2 ஆயிரத்து 700 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் சொகுசு பஸ்கள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதால் தசரா பண்டிகை, தொடர் விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More