சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழங்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில்,உச்சநீதிமன்ற அனுமதியின்படி,உயர்நீதிமன்றத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் விடுமுறை கால அமர்வு முன் ஜெயின் மனு தாக்கல் செய்திருந்;தார் .இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால அமர்வு, உடல்நிலைக் குறைவு மற்றும், மருத்துவக் காரணங்களுக்காக கடும் நிபந்தனைகளுடன் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு, 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More