Mnadu News

உடல் எடையை குறைக்க உதவும் எட்டு வழிகள்

நம் அன்றாட  வேலைகளை செய்யவும் , உடல் உறுப்புகள்  இயங்கவும் , நமக்கு  சக்தி  தேவைப்படுகிறது .இந்த சக்தி நாம் உண்ணும் உணவின் வாயில் தான் கலோரி  கிடைக்கிறது . அதனை கலோரி  என்ற  அளவிடால்  அளவிடுகிறார்கள். ஆனால்  நாம்  எடுத்து  கொள்ளும் உணவு  உடல் கலோரி செலவிடும் சக்தியை  காட்டிலும் அதிகமாகும் போது , உடல்  கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது .

சில பேர்  அதிகமாக  உணவு உண்டாலும்  அவர்களின்  உடல்  ஏறவே  ஏறாது , அதே போல   சில பேருக்கு  உணவு உண்ணாமல் இருந்தாலும் அவர்களுக்கு   எடை அதிகரித்து கொண்டே இருக்கும்,இந்த கேள்விக்கான  பதில்  என்னவென்றால் இந்த கொழுப்பு  அதிகரித்து செல்வதாலே  நமது உடல் எடை  அதிகமாகும். ஆனால் மிக சிலருக்கு  மட்டும் ஹார்மோன்   காரணங்களால்   உடல் எடை குறையும் , சில பேருக்கு  பருமனும்  அதிகரிக்கின்றன .

 

ஆனால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட  இந்த வழிமுறையை  பயன்படுத்தினாலே  குறைந்தது மாதம் 4 கிலோ  எடை  குறைவது  மிக உறுதி .

எழுந்தவுடன் தண்ணீர் பருக வேண்டும் ;

தினசரி  காலை  எழுந்தவுடன்  ஒன்று அல்லது  இரண்டு  தம்ளர்   தண்ணீர் பருகி  வர வேண்டும் . இரவு நேரங்களில் அதிக  அளவில்  தண்ணீர் பருகாமல் இருப்பது நல்லது. காலையில் எழுந்தவுடன் வெறும்  வயிற்றில்  தண்ணீரை குடித்தால்  ஏகப்பட்ட  நன்மைகள்  உண்டாகும் .

உடற்பயிற்சி  செய்வதால்  ஏற்படும் நன்மைகள் ;

தினமும்  குறைந்தது  35  நிமிடம் உடற்பயிற்சி ,வேகநடை ,ஸ்பாட்  ஜாக்கிங்  , கைகளின் , ஸ்கிப்பிங்  போன்றவையோ அல்லது இதர பயிற்சிகள் செய்து  வரவும் . இதை நமது  உடலில்  உள்ள  கொழுப்புகளை  கரைக்க உதவுகின்றன .

உடற்பயிற்சி செய்யும் போது எடுத்து கொள்ளகூடிய  ஜூஸ்  வகைகள் ;

உடற்பயிற்சி செய்யும் போது நாம் தினமும்  பிரெஷாக   வெண்பூசணி அரைத்து  சர்க்கரை இல்லாமல்  சாறை பருகவும் . வெண்பூசணி பிடிக்காதவர்கள்  வாழைத்தண்டு  சாறை    குடிக்கவும் . இதை  தினசரி பருகி  வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம் .

டீ,காப்பி  பருகும் போது  கடைபிடிக்க வேண்டியவை ;

காப்பி  , டீ அருந்தும் பழக்கமுடையவரா நீங்கள் ,அதில் பால் சேர்ப்பதற்கு  பதிலாக   காப்பி  அல்லது  டீயில்   எலுமிச்சை சாறு

பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து  அருந்துபவர்களாக  இர்ருந்தால் பாலை 3 -4  முறை காய்ச்சி  ஆடை  நீக்கிய   பின் பயன்படுவது  நல்லது . முடிந்தவரை   சர்க்கரையை தவிர்பது நல்லது.

  காலை  எடுத்து  கொள்ள கூடிய  உணவு   வகைகள் ;

நன்றாக வெண்ணை  எடுத்த  மோர்   தினமும்  காலையில்  எழுந்தவுடன்  குடித்து  வரவும். வெறும் மோர் மற்றும் எடுத்து கொள்ளாமல் அதனுடன்  கொய்யா  கனியை  சாப்பிட்டு  வரலாம் . பிறகு   காலையில்  நாம் சாப்பிடும் பொது  வெண்ணை தடவாத   ரொட்டி , ஸாண்டவிச் அல்லது  இதில் இரண்டு  எடுத்து  கொள்ளலாம் .

மத்திய  உணவு எடுத்து கொள்ளும்  உணவு  வகைகள் ;

இரண்டு கரண்டி  ஏதேனும் ஒரு வகை கீரையையும்  அதனுடன்  2 கரண்டி நீர்சத்து   அதிகமுள்ள  காய்கறிகளான  வெண்பூசணி அல்லது  புடலங்காயுடன் பருப்பு சேர்த்து  தேங்காய்  சேர்க்காமல்  கூட்டு  ,1  கரண்டி  சாம்பாருக்கு  ஒரு  கப்  சாதம்  அல்லது  எண்ணெய் சேர்க்காத

இரண்டு  கோதுமை சப்பாத்தி  ,1  கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது 1 டம்ளர்  மோரை  எடுத்து கொள்ளலாம் .

இரவு  உணவில் எடுத்து கொள்ளக்கூடியவை ,

வேக வைத்த காய்கறிகள் 3 கப்  அல்லது  சூப் பப்பாளி  அல்லது ஆரஞ்சு  அல்லது பைன் ஆப்பிள் 6 துண்டு அல்லது கொய்யா 3 துண்டு .

நாம் அன்றாட வாழ்வில்  கடைபிடிக்க வேண்டியவை ;

பச்சை  காய்கறிகள் சாலட் ,பகலில் உறங்குவதை   தவிர்ப்பது நல்லது .எண்ணெய்  பதார்த்தங்களை   மற்றும்   நொறுக்குத் தீனிகளை   தவிர்கவும் .உப்புள்ள  ஆதாரங்களை   அதாவது  ஊறுகாய் ,சிப்ஸ் ,உப்பு ,பிஸ்கட்  தவிர்க்கவும்  .இரவில்  உண்ட பின்னர்  குறுநடை   செய்த பின்னர் உறங்க செல்லவும். ‘இளைத்தவனுக்கு  எள்ளு கொழுத்தவனுக்கு  கொள்ளு ‘ என்ற பழமொழிக்கு   ஏற்ப  காலையில்  கொள்ளு  கஞ்சி கொடுப்பது  நல்லது .

Share this post with your friends