Mnadu News

உடல் சூட்டை குறைக்க இயற்கை வழிமுறைகள்

உலகம் முழுக்க மக்கள் இந்த உடல் உஷ்ண பிரச்சனையை எதிர்கொள்ளவே செய்கிறார்கள். உடல் வெப்பநிலை சீராக இருக்கும் வரை உடலில் பாதிப்பு வராது. உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு இல்லாமல் அதிக வெப்பத்தை கொண்டிருப்பதையே உடல் உஷ்ணம் என்கிறார்கள். உடலின் வெப்பநிலை 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியஸ் வரம்புகளுக்கு இடையில் உள்ளது.

கோடை காலம் ஆரம்பித்தவுடன் உடலில் வெப்பத்தின் தாக்கமும் அதிகரிக்கிறது. உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் பலவிதமான பிரச்சைகளும் வந்துவிடுகிறது. அதிக உடல் சோர்வு,வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, அதிக வேர்வை, சிறுநீர் கழிப்பதில் பிரச்னை மற்றும் சரும நோய்கள் போன்ற பலவிதமான பிரச்சனைகள் உடல் உஷ்ணத்தால் ஏற்படுகிறது.

தீவிரமான வெப்பநிலையில் உடல் இருக்கும் போது, போதுமான நீரை காட்டிலும் மிக குறைவாக உடல் பெறுவது, அதிக கடினமான உணவு, மசாலா உணவுகளை மட்டுமே தொடர்ந்து பெறுவது என எல்லாமே உடல் உஷ்ணத்தை உண்டாக்க கூடும். அதனால் சரியாக எதனால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் என்று கணிப்பது சிறிது கடினம்.

இயற்க்கையான முறைகளில் உடல் உஷ்ணத்தை குறைக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். முகத்தை பாதுகாக்கும் அளவிற்கு நம் பாதங்களை பாதுகாப்பது இல்லை என்பதே உண்மை. உண்மை உள்ளங்கால்களை குளிர்ந்த நீரில் நனைப்பதால் உடல் குளிர்ந்துவிடுமா என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் இது நல்ல பலன் கொடுக்கும்.

அகலமான பாத்திரத்தில் மிதமான நீர் விட்டு தேவைப்பட்டால் ஐஸ் க்யூப் சிலதும் சேர்க்கலாம்.  இதில் இரண்டு கால்களையும் சேர்த்து அரை மணி நேரம் வரை மூழ்க வைக்கவும். உடலை குளிர்விக்கும் ஆற்றல் தண்ணீருக்கு உள்ளது. உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க இவை உதவும் என்பதால் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் போது 20 நிமிடங்கள் வரை கால்களை நீரில் நனைத்து வைக்கவும்.

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழியாகும். நல்லெண்ணெய் இல்லாவிட்டாலும், தினமும் தேங்காய் எண்ணையை தலையில் தேய்த்து குளிப்பது நல்லது.

முன்னர் காலத்தில் இரவில் தூக்குவதற்கு பயையே பயன்படுத்துவர். ஆனால், இப்போதோ மெத்தை பயன்படுத்துவதால் அதிக உஷ்ணம் உடலுக்கு உண்டாகின்றது. செல்வதற்கு முன் தலை மற்றும் பதத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்து விட்டு தூக்கினாள் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும்.

வெயில் காலங்களில் சூரிய வெப்பத்தின் தாக்கத்தால் நம்மில் நிறைய பேருக்கு  அடிக்கடி தலைவலி உண்டாகும். அதனை சரி செய்ய  வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு பயன்படுத்தும் நல்லெண்ணெயை.காய்ச்சி மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வெந்நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சருமத்துவாரங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தை குறைக்க செய்யலாம். உடல் உஷ்ணம் உண்டாகும் போது சருமத்தின் மேற்பரப்பிலும் குளிர்ச்சியை உண்டாகும். அதனால் சருமத்தின் மீது கற்றாழை ஜெல் அல்லது செடியில் இருக்கும் காற்றாழையையும் பயன்படுத்தலாம். அதே போன்று அசல் சந்தனத்தையும் சருமத்தின் மீது பயன்படுத்தலாம். ஆயுர்வேத முறைப்படி சந்தனத்தை உடலுக்கு குளிர்ச்சி தர பயன்படுத்தலாம். இதில் கற்றாழையை சாப்பிடவும் செய்யலாம்.

இளநீர், பதநீர், நுங்கு, நீர் மோர், கம்பங்கூழ் போன்றவை உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

வைட்டமின்-சி நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை என எல்லாமே உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியவை தான்.  உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்க மாதுளம்பழச்சாறை தினசரி உட்கொள்ளலாம். எலுமிச்சை சாறை பிழிந்து அதில் கல்லுப்பு சேர்த்து உட்கொள்ளலாம். இது உடல் உஷ்ணத்தையும் தணிக்கும். அதோடு சேர்த்து உடலுக்கு ஆற்றலையும் கொடுக்கும். எனினும் மாலை நேரங்களில் குடிப்பதை தவிர்க்கலாம்.

உணவு பொருட்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உட்கொள்வது நல்லது. முள்ளங்கி, புடலங்காய், வெள்ளாரிக்காய்,செள செள,காலிஃப்ளவர், முட்டை கோஸ், நூக்கல் என காய்கறிகள். பழங்களில் தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி போன்றவை அதிகமாக சேர்க்கலாம். இதை அதிக காரம் சேர்க்காமல் ஆவியில் வேகவைத்து சாப்பிடலாம் அல்லது பச்சையாக சாலட் (Salad) போன்று அல்லது தயிரோடு சேர்த்தும் சாப்பிடலாம்.

புதினா இலைகள் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். மேலும் வைட்டமின்-சி அதிக அளவில் உள்ளது. சுடவைத்து தண்ணீரில், ஒரு கையளவு புதினா சேர்த்து சிறுது நேரதில் இலையின் சாறுகள் தண்ணீரில் இறங்கிய பிறகு அதில் எலும்பிச்சை அல்லது தேன் சேர்த்து குடிக்கலாம். உடல் உஷ்ணம், கண் எரிச்சல் போன்றவை குறைக்க உதவும்.

கோடைக்காலத்தில் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் உடல் வெப்பநிலையை இயற்கைமுறையில் குறைக்க   முடியும்.

Share this post with your friends