மத்திய அமெரிக்க நாடான பனாமா சென்ற எஸ் ஜெய்சங்கர், தலைநகர் பனாமா சிட்டியில் நடைபெற்ற 4 வது இந்தியா-மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேறறு பேசியுள்ளஅவர்,எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவை தெற்குலகம் சந்திக்கும் இரு பெரும் சவால்கள் ஆகும். எனவே, இந்த இரு பெரும் சவால்களைத் தாண்டி, வளர்ச்சி காண வேண்டிய தேவை நமக்கு உள்ளது. அதற்கு, வர்த்தகமும், முதலீடுகளும், வேலைவாய்ப்பும் பெருக வேண்டும். அதே நேரம்,வறுமை ஒழியவேண்டும்.இதற்கு இந்தியா முக்கிய பங்காற்றும். இத்தகைய சவால்களை தெற்குலகம் எதிர்கொள்ள இந்தியா கூடுதல் பங்காற்றும்.அதே சமயம், சிறு தானிய உற்பத்தி உணவு பாதுகாப்புக்கு மிகப் பெரிய தீர்வை அளிக்கும் என்று பேசியுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More