தமிழக சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள், தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டன. நேற்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடர் 3-வது நாள் கூட்டம்; இன்று நடைபெற்று வருகின்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகிய 4 பேரும் பங்கேற்றுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் வேளையில், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சட்டப் பேரவைப நிகழ்வில் பங்கேற்று வருவதும் அரசில் விமர்சகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More