“மயக்கம் என்ன” திரைப்படத்துக்கு பின்னர் செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ” நானே வருவேன் “. தனுஷ் இரட்டை வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இவர்களோடு நடித்த செல்வா, மனநல மருத்துவராக வரும் பிரபு, மனைவியாக வரும் இந்துஜா, குழந்தை கதாபாத்திரங்கள் என அனைத்தும் படத்துக்கு பலம் சேர்துள்ளன.
யுவன் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் உலக தரம் என்றே சொல்ல வேண்டும்.
குழந்தை பருவத்தில் இருக்கும் போதே நாம் நமது பிள்ளைகளின் மணநலனில் அக்கறை காட்ட வேண்டும் என்ற அழகான காலத்துக்கு ஏற்ற மெசேஜ் ஐ இப்படம் பதிவு செய்துள்ளது. குழந்தை பருவத்தில் மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் தம்பி தனுஷுக்கு உருவாகவே அது பெரிய மனிதனாக உருவாகும் போது ஒரு கட்டத்தில் தமது குழந்தை மற்றும் மனைவியை கொலை செய்யும் அளவுக்கு செல்கிறது, கொலை செய்யப்பட்ட குழந்தையின் ஆவி அண்ணன் தனுஷ் குழந்தையிடம் ஒட்டி கொள்கிறது. அது எப்படி தம்பி தனுஷை பழி வாங்கியது என்பதே படத்தின் மீதி கதை.
சிறந்த ஒளிப்பதிவு, கதை எடுக்கப்பட்ட விதமும், இடமும், சொல்லப்பட்ட நேர்த்தியும் நம்மை அறியாமலேயே திகிலடைய வைக்கின்றன. மொத்தத்தில் தனுஷ், செல்வராகவன், யுவன் இந்த மூவருக்கும் நானே வருவேன் ஒரு சிறந்த கம் பேக்.