Mnadu News

உத்தரகண்டில் கடுமையான பனிச்சரிவு: 28 மலையேற்ற வீரர்கள் கதி என்ன ?

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இமயமலையின் கங்கோத்ரி மலைத்தொடர் திரௌபதி தண்டா-2 உச்சியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நேரு மலையேறும் நிறுவனத்தை சேர்ந்த 29 பேர் இந்த பனிச்சரிவில் சிக்கி உள்ளனர்.அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் புஷ்கர் தமி தெரிவித்துள்ளார்.

இவர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்துடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையும், ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக இந்திய விமானப் படையின் 2 ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றது. வீரர்களை மீட்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends