உத்தரபிரதேசத்தின் ரெபரேலி பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதாகும் மெஹந்தி லால். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த பெண்ணுக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் தன்னுடன் அந்த பெண்ணையும் அவரது மகளையும் அவர் வசிக்கும் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இதற்கு லால் குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பவே. அதே ஊரின் இன்னொரு பகுதியில் அவர்களை தங்க வைத்து கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் மகளிடம் லால் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அந்தப் பெண்ணும் வெளியே கூறாமல் மனதிலேயே வைத்துக் கொண்டு மன வருத்ததில் இருந்து வந்துள்ளார். கடந்த 20 ஆம் தேதி ஒரு கட்டத்தில் லாலின் அட்டூழியங்கள் எல்லை மீறவே, நடந்தவற்றை தமது தாயிடம் கூறி அழுது புலம்பி உள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தாய், லாலை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். பின்னர் லால்லை அடுத்த நாளே லாலை வீட்டுக்கு வரவழைத்துள்ளார், அதன் பின்னர் மதுவில் மயக்க மருந்து கொடுத்து அவரை மயங்க வைத்து, கொலை செய்துள்ளார். கொலை செய்த பின்னர் பிணத்தை இப்படியே வைத்துக்கொண்டல் நாம் மாட்டிக் கொள்வோம் என எண்ணிய நிலையில், சடலத்தை புதர் மண்டிய பகுதியில் சடலத்தை வீசி விட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் சுனில் தமது தந்தையை காணவில்லை என தேடியுள்ளார், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து தானும் தேடி வந்துள்ளார். அப்போது புதர் மண்டிய பகுதியில் லால் பலத்த காயங்களோடு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த ரெபரேலி போலீசார் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை துவக்கினர்.

அப்போது, அவர்களுக்கு லால் உடன் வாசித்த காதலி மீது சந்தேகம் வரவே, அவரை அழைத்து தக்க முறையில் விசாரித்து உள்ளனர். அப்போது தான் மனதை உருக்கும் நிகழ்வை அவர் விவரித்துள்ளார். ஆம், தமது பெண்ணை லால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால், நாளுக்கு நாள் லாலின் தொல்லை மகளுக்கு அதிகரிக்கவே, அவரை அடித்து கொன்று, ஆண் உறுப்பை அறுத்து எறிந்தேன் என கூறி போலீசாரை அதிர வைத்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தை பதிவு செய்துக் கொண்ட போலீசார் தாய், மகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.