லக்னோவில் அகிலேஷ் யாதவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கலவரம் மூண்டது. கலவரத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அலகாபாத்தில் உள்ள பல்கலைகழகத்தில் மாணவத் தேர்தல் நடைபெற்றது. மாணவர்த் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவத் தலைவனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்திற்கு சென்றார்
விமானத்தில் ஏற முயன்ற அகிலேஷ் யாதவை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.
போராட்டம் தீவிரம் அடைந்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆங்காங்கே வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தர்மேந்திரயாதவ் எம்பி உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் காயமடைந்தனர்.
அகிலேஷ் யாதவை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய விவகாரம் மாநில மற்றும் மத்திய அவைகளில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.