“வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ஒரு வழியாக வெளியாகி நல்ல வசூலை குவித்து வரும் நிலையில், சிம்பு தற்போது தமது அடுத்த படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் ஹீரோ, இயக்குனர், கூல் சுரேஷ் ஆகியோருக்கு அன்பளிப்பை வழங்கி அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
இதற்கிடையில், ரஹ்மான் இசையில் வெளிவந்த அந்த படத்தின் பாடல்களில் ஒன்றான “மல்லிப்பூ” பாடல் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. எங்கே பார்த்தாலும் இனஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ என மல்லிப்பூ வாசம் உலகத்தையே ஆட்டி வைத்து வருகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்பாடலின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. பல லட்சம் வியூஸ் ஒரே நாளில் இந்த பாடலுக்கு கிடைத்து தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது.
பாடல் லிங்க் : https://youtu.be/MrzkoLKpgLU