Mnadu News

உலகத்தை ஆட்டிவைக்க வரும் புதிய வைரஸ்! உலக சுகாதார மையம் தகவல்!

2019 ஆம் ஆண்டு ஊகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா என்ற வைரஸ் தொற்று தற்போது வரை உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டி வைத்து தற்போது மெல்ல கட்டுக்குள் வர துவங்கி உள்ளது.

ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து விதமான தொழில்களும் முடங்கி போயிருந்த நிலையில், அனைத்தும் மெல்ல புத்துயிர் பெற்று வருகின்றது. இதற்கிடையில் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயாராகி விட்டோம்.

அனைவரையும் பீதி அடைய வைக்கும் ஒரு அறிவிப்பை தற்போது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என்றும், அதற்கு “கோஸ்டா-2” என்று பெயரிடப்பட்டு உள்ளது. ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share this post with your friends