Mnadu News

உலகமெங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு!

கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் மாறி கொண்டே வருகிறது. தினசரி மத்திய சுகாதார அமைப்பு நிலவரத்தை வெளியிட்டு வருகிறது.

நாடெங்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 5 லட்சத்து 21 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 62 கோடியே 2 லட்சத்து 34 ஆயிரத்து 690 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 16 ஆயிரத்து 264 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends