Mnadu News

உலகின் 5வது பொருளாதார நாடாக திகழ பெருநிறுவனங்களே முக்கிய பங்கு ஆற்றி உள்ளன.

டெல்லியில் நடைபெற்ற நிறுவன செயலாளர்கள் அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்று பேசிய, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் கிருஷ்ணராவ் காரத்,,உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதற்கு பெருநிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.அதோடு, அரசின் வழிகாட்டுதல்களை அனைத்து நிறுவனங்களும் முறையாக பின்பற்றுவதை உறுதி செய்வதில் நிறுவன செயலாளர்கள் முக்கிய பங்காற்றுவதாக கூறினார். மேலும், பெருநிறுவனங்கள் மூலம், கடந்த ஆண்டில் 83 புள்ளி 57 பில்லியன் டாலர் அதாவது 8 ஆயிரத்து 300 கோடியே 57 லட்சம் ரூபாய் அளவிலான வெளிநாட்டு முதலீடுகள் பெறபட்டதாக பகவத் கிருஷ்ணராவ் கூறினார்.

Share this post with your friends