கொரோனா வைரஸின் பிடியில் உலகமே சிக்கி தவித்து வரும் நிலையில், இதன் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஆனாலும், இறப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை உயரவே செய்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 1 லட்சத்து 7 ஆயிரத்து 990 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 41 லட்சத்து 70 ஆயிரத்து 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 60 கோடியே 93 லட்சத்து 64 ஆயிரத்து 671 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 லட்சத்து 72 ஆயிரத்து 490 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.