2019 ஆம் ஆண்டு சீனாவை ஆட்டி வைக்க துவங்கியது கொரோனா என்னும் கொடிய வைரஸ். உலகம் இதில் இருந்து மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலையில், இன்றைய கொரோனா நிலவரத்தை வெளியிட்டு உள்ளது உலக சுகாதார துறை அமைச்சகம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.91 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,591,728 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 634,933,369 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 613,953,155 பேர் குணமடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.