Mnadu News

“உலக அளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்” – பிரதமர் மோடி பெருமிதம்

ஆமதாபாத்: “உலக அளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது” என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இரண்டு மற்றும் அசாமில் ஒன்று உட்பட சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமி கண்டெக்டர் ஆலைகளுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: உலக அளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியா ஏ.ஐ., தொழில் நுட்பத்தை விரிவுப்படுத்தி வருகிறது.

3 செமிகண்டெக்டர் ஆலைகள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும். இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். பல்வேறு காரணங்களால், முதல் மற்றும் இரண்டாவது தொழில் புரட்சியின் போது இந்தியா பின்தங்கியது. தற்போது இந்தியா முன்னோடியாக உள்ளது.

இன்று வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும். பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி ஒரு படி முன்னேறி வருகிறோம். இந்தியா ஏற்கனவே விண்வெளி, அணுசக்தி மற்றும் டிஜிட்டல் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. செமிகண்டெக்டர் துறையில் இந்தியாவும் உலக வல்லரசாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More