இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன் னேறின. முதலாவது அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கி லாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து அணி விளையாட உள்ளதால் உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் நேரில் காண ஆர்வத்துடன் உள்ளனர்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More