கன்னியாகுமரி ; எழுமின் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பங்கு தந்தை ஜெகத் கஸ்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கூறிய அவர் ” ஒன்பதாம் உலக தமிழ் தொழிலதிபர்கள் திறனாய்வாளர்கள் மாநாடு தூபாயில் வருகின்ற நவம்பர் மாதம் 9 ,10 , 11 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, கனடா உட்பட 55 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தமிழ் தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் புதிதாக தொழில் தொடங்கவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும் முதலீட்டாளர்களை சந்திக்கும் வாய்ப்பு ரூபாய் மாநாட்டில் ஏற்படுத்தி தரப்படும் என்று அவர் கூறினார்.