Mnadu News

உலக நாடுகளில் குறையும் கொரோனா பாதிப்பு! நிலவரம் சொல்வது என்ன?

சீனாவின் ஊகான் நகரில் 2019 ஆம் ஆண்டு பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை தன் பிடியில் வைத்து இருந்தது. தற்போது, பல நாடுகளும் கொரோனா கடந்து மெல்ல மீண்டு வர துவங்கி உள்ளது.

ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 99 லட்சத்து 30 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 43 லட்சத்து 89 ஆயிரத்து 295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 60 கோடியே 89 லட்சத்து 69 ஆயிரத்து 979 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 லட்சத்து 71 ஆயிரத்து 421 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share this post with your friends