உலக நாடுகளை எப்போதுமே ஏவுகணை கொண்டு பயமுறுத்துவதில் வட கொரியா கைதேர்ந்த நாடு. வடகொரியா இந்த ஆண்டு பெரிய அளவில் ஏவுகணை சோதனையை தீவிரம் ஆக்கியுள்ளது. இந்நிலையில், இதுவரை சுமார் 30 இக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளது.
அமெரிக்கா போன்ற உலக நாடுகள் வலியுறுத்தியும், வடகொரியா விடாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை நிகழ்த்தி வருகிறது. தொடர்ந்து ஏவுகணை சோதனையை அதிகப்படுத்தி வரும் வடகொரியா, அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் புதிய பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தென்கொரியா இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கை, 2018 உடன்படிக்கையை மீறும் செயல் என்று தெரிவித்ததாக தென்கொரிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.
“வட கொரியாவின் தொடர்ச்சியான தாக்குதல்கள் கொரிய தீபகற்பம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதியை குறைப்பதற்கு உட்படுத்தும் செயல்கள்” என்று கூறி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வடகொரிய அரசு ஊடகம் உடனடியாக செய்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.