உலக நாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூரியா ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை புரிந்த படம் “விக்ரம்”.

பல வருடங்களுக்கு பிறகு கமலஹாசன் பெற்ற கமர்ஷியல் வெற்றி இதுவாகும். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 700 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் அசுர வெற்றியால் கமலஹாசன் லோகேஷ்க்கு ஒரு காரையும், சூரியாவுக்கு ஒரு ரோலக்ஸ் வாட்ச் ஐயும் அன்பு பரிசாக அளித்தார்.

தற்பொழுது உலக நாயகன் பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், விக்ரம் படத்தின் 100 வது வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை கலைவாணர் அரங்கில் நவம்பர் 7 உலக நாயகன் பிறந்த நாள் அன்று மாபெரும் விழா கொண்டப்பட உள்ளது.
