கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி,உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. மொபைல் தயாரிப்பில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது. பெண்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள். பெண் குழந்தைகள் அதிகளவில் பட்டம் பெறுவதை பார்க்கும்போது இதுதான் புதிய இந்தியா என தோன்றுகிறது.இந்திய கல்வி முறையானது தனித்துவமான பண்புகள் கொண்டது. இந்த தனித்துவம் தான் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு உதவுவதுடன், சிறந்த பங்களிப்பையும் ஆற்றுகிறது. மத்திய அரசு நாட்டை ஒரே குடும்பமாக பார்த்து வருகிறது” என்றார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More