Mnadu News

உலக மனநல நாள்: சமத்துவமற்ற உலகில் மனநல ஆரோக்கியம் அவசியமே

உடல்நலத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம் மனநலத்திற்கு கொடுக்க படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. உடம்பு சரியில்லனா ஆஸ்பத்திரிக்கு போகும் நாம், மனசு சரியில்லனு ஆஸ்பத்திரிக்கு போறத பைத்தியக்காரதனமாகவே நினைக்கின்றோம் நம்மில் பலர். இந்த வருடத்திற்கான உலக மனநல நாள் தலைப்பு “சமத்துவமற்ற உலகில் அனைவர்க்கும் மனநலம்.

மனநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினமாக கொண்டாடப்படுகிறது. 1992இல் இருந்து உலக மனநல நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு, உலக நல மருத்துவ அமைப்பு, இந்திய மனநல மருத்துவ சங்கம் போன்றவற்றின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் அக்டோபர் 4 முதல் 10-ம் தேதி வரை உலக மனநல பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த அமைப்பில் 150திற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றது. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாளை மனநல வாரமாக ஒரு வாரத்திற்கு கொண்டாடப்படுகிறது.

உலக மனநல தினம் 2022: தலைப்பு

உலக மனநல நாள் 2022 வருடத்திற்கான தலைப்பு “சமத்துவமற்ற உலகில் அனைவர்க்கும் மனநலம்” (Mental Health in an Unequal World) என்று உலக நல மருத்துவ அமைப்பு தெரிவித்து உள்ளது.

உலக மனநல தினம் 2022: முக்கியத்துவம்

நீங்கள் எதைச் சந்தித்தாலும், நீங்கள் தனியாக இல்லை என்பதை இந்த நாள் உங்களுக்கு நினைவூட்டுகிறது. நாம் மட்டுமே கடினமான நேரத்தை எதிர்கொள்கிறோம் என்று அடிக்கடி நாம் எண்ணுவதுண்டு. மற்றவர்கள் அதைக் கடந்து தான் வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் சொந்த வலியை நீங்கள் சமாளிக்க முடியும் என்பதை இது உங்களுக்கு நினைவூட்டுவதே இந்த நாளின் முக்கியத்துவமாகும்.

உலக மனநல தினம் 2022: குறிக்கோள்

உலக மனநல தினக் கொண்டாட்டத்தின் நோக்கம், உலகெங்கிலும் உள்ள மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மனநலத்திற்கு ஆதரவாக முயற்சிகளைத் திரட்டுவதும் ஆகும். மனம் என்பது உடலின் ஒரு அங்கமாக இருப்பதுபோல சமூகத்தின் அங்கமாகவும் இருக்கிறது. உடல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தின் வழியாகவே அடைய முடியும். சமத்துவமற்ற உலகில் ஆரோக்கியத்துக்கான வழிமுறைகளும், அதனை மீட்டெடுப்பதற்கான சேவைகளும் எல்லோருக்கும்  எளிதாகவும், சமமாகவும் கிடைப்பதில்லை. தனிப்பட்ட ஒருவரின் ஆரோக்கியம்,  தனிமனிதரின் பொறுப்பு மட்டுமல்ல, அது ஒரு அரசின் பொறுப்பு என்பதை அரசு உணர வேண்டும். அதில் மனநலமே முதன்மையானதாக இருக்க வேண்டும்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More