Mnadu News

உளுந்தூர்பேட்டையில் காலணிகள் உற்பத்தி ஆலை: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தைவான் நாட்டின் பௌ சென் குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சிப்காட்-உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில், காலணிகள் உற்பத்தி செய்ய புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முதல் அமைச்சர்; முன்னிலையில் மேற்கொண்டது.இந்த நிறுவனம் அடுத்த 12 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 302 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. அதோடு இந்த நிறுவனம்; 20 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends