கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் இவர் தனது நிலத்தில் வீடுகட்டி தனியாக குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். சொந்த வேலையின் காரணமாக குடும்பத்துடன் வெளியூர் சென்றதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் மெயின் கேட் மெய்ன் கதவு இரண்டு பெட் ரூம் கதவுகள், என நான்கு கதவுகள் மற்றும் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த இரண்டு பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், மற்றும் 1லட்சம் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வரவைத்து தற்போது கை ரேகை மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். மேலும் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வெளியூர் செல்லும் நபர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து செல்ல அறிவுறுத்தியும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.