திருப்பூர் முத்தம்பாளையம் கிராமம் முண்டூர் காவலை தோட்டம் பகுதியில் ஊத்துக்குளி காவல்துறையினர் மற்றும் தாராபுரம் மதுவிலக்கு காவலர்கள் சோதனை மேற்கொண்டனர் .
அப்போது அப்பகுதியில் சானிடைசர் என்ற பெயரில் சட்ட விரோத விற்பனைக்காக சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக குணசேகரன் , விஜய் , விக்னேஷ் , சதீஷ் , ஜெயராஜ் , சுலைமான் மற்றும் மனோஜ் ஆகிய ஏழு பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 1750 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் விற்பனைக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் இரண்டு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்த தாராபுரம் மதுவிலக்கு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.