தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தெலங்கானா மக்களுக்கு நான் ஒரு உறுதியை அளிக்கிறேன், ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கும் ஊழலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது.எனவே, மக்களே, ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிப் பெயரை குறிப்பிடாமல் பேசிய மோடி, ஊழல்வாதிகள், ஒன்றாக இணைந்து கொண்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள். ஊழல் வாதிகள் இணைந்து கூட்டணி அமைக்கப் பார்க்கிறார்கள் என்று சூசகமாகக் குறிப்பிட்டார். மாநிலத்தில் ஊழல் எனும் இருள் நீங்கி, குடும்ப ஆட்சி ஒழிந்து, தெலங்கானாவில் நம்பிக்கை எனும் தாமரை மலர் மாநிலம் முழுக்க மலரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தெலங்கானா முதல் அமைச்சர்; சந்திரசேகர ராவை குறிப்பிடும் வகையில் பேசிய மோடி, தெலங்கானா மக்கள், குடும்ப ஆட்சியை விரும்பவில்லைடி. மக்களுக்கான ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள் என்றும் கூறி உள்ளார்.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More