நடிகர் கார்த்தி ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து அடுத்த கட்ட நகர்வுகளை சரியாக நகர்த்தி வருகிறார். அப்படி, ராஜூ முருகன் கார்த்தி கூட்டணியில் உருவாகி வருவது தான் “ஜப்பான்”. இது கார்த்தியின் 25 வது படமாகும்.
ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸீ போன்ற படங்களின் மூலம் உலக அரசியலை பேசி இந்தியாவையே தன் படைப்புகள் மூலம் அலற விட்டவர் ராஜூ முருகன்.
ஜி வி பிரகாஷ் குமார் இசையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முற்றிலும் வித்தியாசமாக உள்ளதால் படத்தின் மீது தற்போதே எதிர்பார்ப்பை பற்றி வைத்துள்ளார் இயக்குநர் ராஜூ முருகன்.