தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்த படம் ஹிட் ஆகும் எந்த படம் தோல்வி அடையும் என யாராலும் கணித்து விட முடியாது. பெரிய அளவில் புரொமோஷன் செய்த படங்களும் தோல்வி அடையும், புரொமோஷன் இன்றி வெளியாகி சக்கை போடு போட்டு வெற்றி பெற்ற வரலாறும் உண்டு.

அப்படி கடந்த சில மாதங்களில் பெரிய அளவுக்கு புரொமோஷன் மற்றும் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்து உள்ளன.

மாறன், ராதே ஷ்யாம் இரவின் நிழல், தி லெஜன்ட், கோப்ரா ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தன. இந்த படங்களில் ஒரு சிலவற்றை ஒடிடி நிறுவனங்கள் அடிமட்ட விலைக்கே வாங்கி உள்ளன.

இதில் கோப்ரா, தி லெஜன்ட் படங்கள் புரொமோஷன் பணிகளுக்கு என்றே பெரும் தொகையை செலவு செய்தது லைகா நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
