அட்டகத்தி படத்தின் மூலம் எளிய மக்களின் வாழ்வியலை எளிய திரை மொழியில் காண்பிக்கும் சில இயக்குனர்களில் பா. ரஞ்சித் குறிப்பிட தகுந்தவர். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என தரமான படங்களை கொடுத்தவர் பா.ரஞ்சித்.
தற்போது, விக்ரம் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி உள்ள படம் தான் “தங்கலான்”. இரண்டாவது முறையாக சந்தோஷ் நாராயணன் இல்லாமல் பா.ரஞ்சித் ஒரு புது கூட்டணியை அமைத்துள்ளார். அப்படி தான் உருவாகி உள்ளது ஜி வி பிரகாஷ் குமார் பா. ரஞ்சித் கூட்டணி. நேற்று இப்படத்தின் டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்த டீசரை பார்க்கும்போது பழங்குடி மக்களின் வாழ்வியல் சார்ந்த படமாக உருவாக போகிறது என தெரிகிறது.
இதனால், பா. ரஞ்சித் சந்தோஷ் நாராயணன் கூட்டணி உடைந்துள்ளது என்பது தெளிவாகி விட்டது எனலாம்.
டீஸர் லிங்க் : https://youtu.be/0kd9Tyga508