2018 லைக்கா நிறுவனத்தின் ₹600 கோடி பிரம்மாண்ட முதலீட்டில் வெளியாகி உலகமெங்கும் ₹800 கோடிகளை வாரிக் குவித்து வசூல் சாதனை புரிந்த படம் “எந்திரன் 2.0”.
ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் லீட் ரோல்களில். அக்ஷய் குமார் நெகடிவ் ரோலில் நடித்து ரசிகர்களை ஆச்சரிய பட செய்தார். ஜெயமோகன், மதன் கார்க்கி வசனங்கள், ஏ ஆர் ரஹ்மான் இசையில், இப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
மதன் கார்க்கி வரிகளில் பாடல்கள் வைரல் ஹிட் அடித்தது. எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்றாலும் ₹200 கோடி லாபத்தை பெற்றது.
இப்படம் வெளியாகி நேற்றோடு நான்கு வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இணையத்தில் 2.0 படத்தை குறிப்பிட்டு கொண்டாடி வருகின்றனர்.