பாஜகவைச் சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பா பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: நான் பாஜகவால் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. நான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறேன். நான் தற்போது கூட அரசியல் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மாவட்டத் தலைமயகத்துக்கு செல்கிறேன். அந்த நிகழ்வில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கட்சியில் இருந்து என்னைப் புறக்கணிக்க நினைப்பதாக வெளியாகி வரும் தகவல் உண்மை இல்லை. யாரும் யாரையும் ஒழித்துக்கட்ட முடியாது. எனக்கு என்னுடைய சொந்த செல்வாக்கு இருக்கிறது. நான் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவர கடுமையாக உழைத்துள்ளேன். அது கர்நாடக மாநிலம் முழுமைக்கும் தெரியும் என்றார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More