Mnadu News

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கும் என்று மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு இன்று தொடங்கும் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு வரும்;. 20 ஆம் தேதி வரை நடைபெறும். ,இதற்கிடையே, வரும்; 17ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிக்குள் மாநிலங்களில் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வு மூலம் கல்லூரிகளை தேர்வு செய்தவர்கள், வரும் 28ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற்றுவிட வேண்டும். ,இதுபோல, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கிடையே, மாநிலங்களுக்கான 2 அம் கட்ட கலந்தாய்வு நவம்பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை நடைபெறும். இதன்பிறகு, காலியாக இருக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களுக்கு டிசம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடைபெறும். நாடு முழுவதும் முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 15ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends