Mnadu News

எலான் மஸ்க் வசமானது ட்விட்டர்: முக்கிய அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்.

உலகின் முன்னணி பணக்காரரான தொழிலதிபர் எலான் மஸ்க், கடந்த ஏப்ரல் மாதம் பிரபல சமூக பலைத்தளமான ட்விட்டரை முழுமையாக வாங்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 44 பில்லியன் டாலருக்கு அதாவது .30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து ட்விட்டரை நிறுவனத்தை தன் வசமாக்கியதை குறிக்கும் விதமாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவன தலைமையகத்திற்கு கை கழுவப் பயன்படுத்தும் தொட்டியுடன் சென்ற விடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பின்னர், தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், நேற்று ட்விட்டரை வாங்குவதற்கான 44 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை மஸ்க் முடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நிறைவேற்றும் விதமாக ட்விட்டரின் முழு கட்டுப்பாட்டை தன் வசமாக்கியுள்ள எலான் மஸ்க், தனது ட்விட்டர் கணக்கின் பயோவை ‘ஊhநைக வுறவை’ என மாற்றியுள்ளார்.
ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், நிறுவனத்தின் இந்திய வம்சாவளி தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெத்செகல், உயர்மட்ட சட்ட நிர்வாகி விஜயா காடே மற்றும் பொது ஆலோசகர் சீன் எட்ஜெட் ஆகிய நான்கு முக்கிய அதிகாரிகளை நீக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends