கடுகு விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் சரும ஆரோக்கியம் தரும் பண்புகள் உள்ளது. உடலில் கேன்சர் உருவாகக் காரணமான செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
நாம் சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகு விதைகள் வெறும் சுவையை மட்டுமல்லாமல் அதோடு ஏராளமான நன்மைகளையும் தருகிறது.
ஐரோப்பிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட கடுகு, அதை தொடர்ந்து வடக்கு ஆப்பிரிக்கா நோக்கி பரவ தொடங்கியது. அதேபோல ஆசியாவிலும் இந்தியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளில் கடுகை அதிக அளவில் பயன்படுத்தினர்.
மஞ்சள், கருப்பு, சிவப்பு, வெள்ளை என பல நிறங்களில் இருக்கும் கடுகானது பல மருத்துவ குணங்களைக் கொண்டது.
பொதுவாக நாம் சமையலில் கடுகு தலித்துசேர்ப்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கடுகில் அதிக அளவு வைட்டமின் மற்றும் மினரல்ஸ் உள்ளது. கடுகு விதைகள் இரத்த சர்க்கரை அளவை குறைத்து, நோய் மற்றும் தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்க உதவுகிறது. இப்படி இன்னும் என்னென்ன நன்மைகளை கடுகு விதைகள் தருகிறது என அறிவோம்.
கேன்சரில் இருந்து தடுக்கும் கடுகு
கடுகு விதையில் குளுக்கோஸினோலேட்ஸ் (Glucosinolates) மற்றும் மைரோசனாஸ் (Myrosanas) என்னும் மூலக்கூறுகள் நிறைந்திருக்கின்றன. இது புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்க உதவுகிறது. புற்றுநோய் செல்களை வளரத் தூண்டும் கார்ஜினோஜென்ஸால் (Carcinogens) ஏற்படும் விளைவுகளை கடுகு தடுக்கிறது. ஹுயுமன் அண்டு எக்ஸ்பிரிமெண்டல் டாக்ஸிகாலஜி (Human and experimental technology) என்கிற பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி இந்த சின்னஞ்சிறிய விதைகளில் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறது மேலும் புற்றுநோய்க் காரணிகளின் பாதிப்புகளுக்கு எதிராக பாதுகாக்கிறது என்று தெரிவிக்கிறது.
தலைவலிகளை போக்கும் கடுகு
உங்களுக்கு தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும்போது கடுகு மிக நன்றாகவே செயல்படும். இதில் நரம்பு மண்டலத்திற்கு ஆறுதலளிக்கும் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் வலிகள் மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு நிவாரணம் தரும் மக்னீசியம் அதிக அளவில் கடுகில் உள்ளது. நம் உடம்பில் ஏற்படும் வலிகள் மற்றும் அழுத்தங்களை கூட போக்க உதவும்.
செரிமான பிரச்சனைகளுக்கு கடுகு
கடுகின் விதைகள் உங்கள் செரிமான மண்டலத்திற்கு பெரும் நன்மைகளைச் செய்கிறது. செரிமானப் பிரச்சனையால் பாதிக்கபட்டிருந்தால் அதிலிருந்து விடுபட கடுகு பெரிதும் உதவுகிறது. இந்த சிறிய விதைகளில் ஏராளமான நார்ச்சத்து அடங்கியுள்ளது. இது கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது மேலும் உடலின் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. அதனால் தான் நாம் சமைக்கும் அணைத்து உணவுகளிலும் கடுகை சேர்க்கிறோம்.
பற்கள்,எலும்புகளை வலுவு பெற உதவும் கடுகு
கடுகுவிதைகள் எலும்புகள், பற்கள் மற்றும் ஈறுகளை வலுப்படுத்துகின்றது. இதில் எலும்புகளை வலிமையாகக்கும் செலினியம் (selenium) உள்ளது. செலினியம் நகங்கள், பற்கள் மற்றும் தலைமுடி வலுப்படுத்த உதவுகிறது. கடுகு விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி (Allergy) எதிர்ப்பு பண்புகள் உள்ளது. கடுகில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் (Antioxidant) மற்றும் ஆன்டி – இன்ப்ளாமேட்டரி (Anti Inflammatory) மூலக்கூறுகள் அடங்கியுள்ளது. எலும்புகள் மற்றும் பற்களின் ஈறுகளில் வலியைப் போக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியத்திற்கு உதவும் கடுகு
ஒவ்வொரு பருவ நிலையிலும் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இதற்கு கடுகு அதிக அளவில் உதவுகிறது. கடுகு சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. மேலும், சருமத்திற்கு ஈரப்பதமூட்டி அதில் உள்ள அழுக்குகளை போக்குகிறது. சருமத்தில் முகப்பருக்கள் வராமல் பாதுகாக்கிறது. கடுகில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமதில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது.